அறிகுறி அற்றதோர்
பெருமழையில்
அழகாய் நனைகிறது
காய்ந்த துணிகள்.
பதறி எடுக்கும் அம்மா
பயந்து ஒதுங்கும் தங்கை
சிடுசிடுக்கும் அப்பா.
அனைத்தையும்
அணைத்துப் பொழிகிறது
மண்வாசம் பூத்த
புதுமழை.
வாய்கவ்வா ஓடுகளால்
வாய்க்கிறது
வீட்டினுள் சாரல்…
போர்வைக்குள் ஒடுங்கியது
எங்கள்
அவசர உடலுடன்
ஆறாவது அறிவும்.
மெல்ல நனைந்தபடி
உள்ளம் சிலிர்க்க
உடலை உதறிவிட்டு
மீண்டும் நனைந்தது எங்கள் வீட்டுப் பூனை.
தமிழ்மோகன்
பெருமழையில்
அழகாய் நனைகிறது
காய்ந்த துணிகள்.
பதறி எடுக்கும் அம்மா
பயந்து ஒதுங்கும் தங்கை
சிடுசிடுக்கும் அப்பா.
அனைத்தையும்
அணைத்துப் பொழிகிறது
மண்வாசம் பூத்த
புதுமழை.
வாய்கவ்வா ஓடுகளால்
வாய்க்கிறது
வீட்டினுள் சாரல்…
போர்வைக்குள் ஒடுங்கியது
எங்கள்
அவசர உடலுடன்
ஆறாவது அறிவும்.
மெல்ல நனைந்தபடி
உள்ளம் சிலிர்க்க
உடலை உதறிவிட்டு
மீண்டும் நனைந்தது எங்கள் வீட்டுப் பூனை.
தமிழ்மோகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக