பக்கங்கள்

வெள்ளி, 16 ஜூலை, 2010

வனவளம்+மீன்வளம்+விவசாயம்

கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்புகள் என்கிற காந்தியின் வார்த்தை எத்தனை பேரால் இந்தநாட்டில் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது..?

கிராமங்களின் தொழில் என்ன?

விவசாயம்..

பாய்முடைதல்..

மண்பாண்டம் செய்தல்..

போன்ற அதிக நபர்களுக்கு வேலைவாய்ப்பு தரும்…..

நாட்டு மக்களுக்கான உணவு தரும்…..

இடங்கள்தான் கிராமங்கள்,,

இதை எத்தனைபேர் உணர்ந்து கிராமத்தை வாழவைத்துக் கொண்டிருக்கிறோம்..

இந்த நாட்டில் கைத்தொழில்கள் போற்றி வளர்க்கப்படுகின்றனவா?

அறிவியல் வளர்ச்சியில் அனைத்தும் கைக்கு அடக்கமான வகையில் சுருங்கிவிட்டது.. இனி எதற்கு கைத்தொழில்களை பிடித்துக்கொண்டிருக்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறது சரிதான்.!

மருத்துவம்…. பொறியியல்…. கணக்கியல்…. மின்னியல்.. மின்னணுவியல்… என்று மனிதன் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கிறான்..




எந்த வசதியுமே இல்லாத கிராமத்தில்…

நாட்டு மக்களுக்கான உணவு தந்த கிராம மனிதன்

இன்று நகர வாழ்க்கையிலும்..

மேல்நாட்டு வாழ்க்கையிலும்

முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில்..

கிராமத்தை நினைவூட்டி ஏய்யா....

என்று நீங்க‌ள் ச‌லித்துக் கொள்வ‌தும் புரிகிற‌து.

ப‌த்தாயிர‌த்தின் ம‌ட‌ங்குக‌ளாக‌வும்..

ல‌ட்ச‌ங்க‌ளாக‌வும் ச‌ம்பாதித்து..

ச‌ம்பாதித்த‌ ப‌ண‌த்தில் ம‌னைவி குழ‌ந்தைக‌ளோடு
(பெற்றோர்க‌ளை துர‌த்திவிட்டோ அல்ல‌து முதியோர் இல்ல‌த்தில் சேர்த்துவிட்டோ)

ம‌கிழ்வோடு வாழ்ந்துகொண்டிருக்கும்போது அந்த‌ கிராம‌ காட்டானுக‌ வாழ்க்கைய‌ ஏய்யா சொல்லிட்டு நேர‌த்தை வீண‌டிக்கிறீங்க‌.!



ந்கர நாகரீகத்தின் வளர்ச்சியில் மறக்கப்பட்ட கிராமங்கள்...

உணவு விளைச்சலுக்கு காரணமான விவசாய குடும்பங்களின் வியர்வைகள்..
பணம் என்ற மூன்றெழுத்து சாதனத்தை கட்டுக்கட்டாய் சம்பாதித்துவிட்ட திமிரில்..




இங்க உணவுப் பொருள் கிடைக்கலைன்னா என்ன எங்கிட்ட பணம் இருக்கு..

வெளி நாட்டுல வாங்கிக்கறேன்..

அப்பிடியும் இல்லைன்னா வெளிநாடே குடிபோகறேன்..

இவனுக கிராமத்துல உழைச்சு நொட்டலைன்னா நாம் பொழைக்க முடியாதாக்கும்.?.

மமதை பிடித்த ஆணவ பேச்சுகள் பெருகிவருகின்றன...

இவ்விதமான எண்ணங்கள் பேச்சுகள் யார் யாரிடம் உள்ளன?

பெரும்பாலும் நகரவாழ் மக்களிடம்,,

குறிப்பாக உழைப்பை சாராமல் பணம் சம்பாதிக்கும் அறிவைக்கொண்டுள்ள அனைவரிடமும் உள்ளது,,

சாயத்தொழில்,,
தோல்பதனிடும் தொழில்,,
மணல் அள்ளும்,,
ரியல் எஸ்டேட்,,

போன்ற விவசாய சீரழிவை ஏற்படுத்தும் அனைத்து முதலாளிகளிடமும் உள்ளது..

மழையின்மை வறட்சி போன்ற காரணங்களால் நகரம் பெயர்ந்த தொழில் சார்ந்த தொழிலாளர்களிடமும் உள்ளது...

இந்த விதமான எண்ண வளர்ச்சியை.. நிலைமையை.. வளரவிடுவதால்

யாருக்கு லாபம்..?
யாருக்கு நட்டம்..?.

ஆலை உற்பத்தியானது,,

வனவளம்+மீன்வளம்+விவசாயம்

போன்ற மூன்றின் உற்பத்தியைவிட கூடுதலாக உள்ளது

என்று நாட்டின் உற்பத்தி நிலையை மதிப்பிடும் நிலையால் யாருக்கு லாபமோ அவர்களுக்கே மேற்சொன்ன லாபம்..

நட்டம் வழக்கம் போல்

வனவளம்+மீன்வளம்+விவசாயம்

போன்ற தொழில்களை நம்பி உள்ள.. நடுத்தரவர்க்கமாய் இருந்து திண்டாடுவோருக்கும்தான்..

இப்படி திண்டாடும் மக்களை திருப்திப்படுத்தத்தான்..

வேலைவாய்ப்பில் உறுதி கொடுக்காத‌ கல்விக் கடனும்..

இலவசங்களும்..

வருங்கால இளையதலைமுறையோ..

வாழும் தலைமுறையோ சிந்திக்க கூடாது என்பதற்க்குத்தான்

ஆபாச சினிமாக்கள்..

கிரிக்கெட் ஆட்டங்கள்..

வீட்டிற்குள் பெண்களை அழுத்திவைக்க தொடர்கள்..

ஆபாச சினிமா பாடல்கள் நகைச்சுவைகள்..

மீறி சிந்தித்து வருபவர்களை திசை திருப்ப சாமிகள்..



சாமியார்கள்..

சாமியார்களின் லீலைகலைக் காட்டி தங்களை

முற்போக்குவாதியாக நாடகம் காட்டுவது..
செம்மொழி மாநாடுகள்..

சினிமாத்துரை விருது விழாக்கள்..

வீதிக்கு வீதி அரசின் மதுக்கடைகள்..

இதையும் மீறி சிந்தித்து செயல்பட யாரும் முன்வந்தால்..

அவன் மீது காவல்துறையின் அடக்குமுறை..

நக்சலைட் முத்திரை.. இன்னும்.. இன்னும்...

சிந்திக்க சிரமமாக..

மனதுக்கு துக்கமாக உள்ளது..

விரக்தியடைந்து வீணாகிவிடுவோமோ என்று மனம் உழல்கிறது..

இந்தக் கட்டுரை ஒரு சீரழிவின் பதிவு..

பதியமட்டுமே எல்லோரும் செய்கிறோம் எழுத்தாளர்களாய்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக