பக்கங்கள்

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

இப்ப எல்லாரும் நாகரீகத்தை படிச்சிட்டாங்க

அது ஒரு பெரிய கிராமம்..
அய்நூறு வீடுகளுக்குமேல் அந்தகிராமத்தில் உள்ளது..

ஆரம்பகாலத்தில் ஏழெட்டு வீடுகளே தோன்றிய கிராமம் வேகமாக வளர்ந்தது...
அய்நூறு வீடுகள்வரை பெருகி அதன்பின்.. அந்த வளர்ச்சி சட்டென நின்று விட்டது...

அதாவது 1930 ல் உருவான அந்த ஊர் 1950 ஆம் வருடத்துடன் வளர்ச்சியை நிறுத்திக்கொண்டது...

அந்த ஊரை ஒட்டி ஒரு நெடுஞ்சாலை போகிறது.. அதில் அந்த ஊருக்கு தொடர்பாக பல பேருந்துகள் வந்து போகின்றன...
தற்போது ஒரு அய்ந்தாறு நாளாய் ஏதோ கலவரத்தால் பேருந்து போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது...

பேருந்து போக்குவரத்து இல்லை என்றதும்... அந்த ஊர் மனிதரெல்லாம் ஏதோ கை கால் இழந்தது மாதிரி... எந்த செயலையும் செய்ய முடியாமல் நிலைகுலைந்து போய் இருந்து கொண்டிருக்கிறார்கள்....

நல்லமுத்து என்ற அந்த ஊர்க்காரர்.. அவர் தெருவழியே நடந்து வரும்பொழுது.. பேருந்து போக்குவரத்து பாதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பை கவனித்தார்...

இன்னும் சிலநாள் பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டால் அனேகம் பேருக்கு சுவாசமே நின்றுவிடும் போல் அவருக்குத் தோண்றியது..

நல்லமுத்துவுக்கு எதிரே வீரபாண்டி என்ற இளைஞன் சைக்கிளீல் வந்துகொண்டிருந்தான்.. சைக்கிளை சற்று நிறுத்தி "என்ன தாத்தா நலமா?" என்று நல்லமுத்துவை விசாரித்தான்...

"என் நலத்திற்கு என்ன குறை? நம்ம ஊருக்குத்தான் நலமில்லை போலிருக்கிறது.. பேருந்தெல்லாம் இன்னும் சிலநாள் ஓடலீன்னா அவ்வளவு பேருக்கும் பைத்தியம் பிடிச்சிடும் போலிருக்கே" என்றார் நல்லமுத்து...

"ஆமாம் தாத்தா ! அந்தக் காலம் மாதிரியா? அப்போ யாரும் அதிகம் வெளியூரே போகமாட்டாங்க.. இப்ப எல்லாரும் நாகரீகத்தை படிச்சிட்டாங்க.. எது வேணும்னாலும் பக்கத்து நகரத்துக்கு போற மாதிரி பழகிட்டாங்க... இனி பேருந்து இல்லாம வாழ முடியுமா" என்றான்...

இதைக் கேட்ட நல்லமுத்துவுக்கு மனதில் எரிச்சலாக இருந்தது...

" எத்ப்பா நாகரீகம்? முன்பெல்லாம் வயலுக்கு தேவையான உரம் உள்ளூரிளேயே சாணம் குப்பை தழையின்னு நாமே உரக்குழியில் சேர்த்து வச்சிருப்போம்...

உழ வேண்டிய ஏருக்கு கொலு வேணுமின்னா உள்ளூர்லயே கொல்லுப்பட்டரை இருக்கும்..

அரிசி,காய்கறி எல்லாம் உள்ளூரிலேயே வெளஞ்சிது..

சுக்கு காபி சாப்பிடறதுக்கு கருப்பட்டியோ, கரும்பு வெள்ளமோ உள்ளூர்லயே கிடைக்கும்..

தேங்காயெண்ணெய், நல்லெண்ணெய் உள்ளூர் செக்கிலயே ஆட்டுவாங்க....

விளக்கெண்ணெய வீட்டுலயே காச்சிக்குவாங்க....

வேட்டி துண்டு சேலை வேணுமின்னா.. உள்ளூர்லயே நெசவு போட்டிருப்பாங்க...

ஆக ஒவ்வொரு தேவையும் உள்ளூர்லயே கிடைக்கிற மாதிரி இருக்கும்... அதுனால நகரம் அது இதுன்னு அலைய வேண்டிய அவசியம் வரலை....

இப்போ நாகரீகம் வந்துட்டு... பேருந்து வந்திட்டுதுன்னு..

நகரம் போயி வெளிநாட்டு உரத்த வாங்க ஆரம்பிச்சீங்க..

சின்ன ஊசி,ஆனி வேணும்னாலும் நகரத்துக்கு ஓட ஆரம்பிச்சி உள்ளூர் கொல்லுப்பட்டறையை ஒழிச்சீங்க...

கிராமத்துல விளையற பொருளையெல்லாம் பஸ்ல நகரத்துக்கு அனுப்பிட்டு.. மறுபடி டவுனுக்கு பஸ்ல போயி அந்த சாமான வாங்கீட்டு வர்றதை பெருமையா நெனக்கறீங்க...

ஊர்ல விளைஞ்ச கரும்பு, எள் எல்லாத்தையும் மூட்டைகட்டி நகர ஆலைக்கு அனுப்பிவிட்டு.. எண்ணெய் வாங்க டவுனுக்கு ஓடுரீங்க...

பருத்திய வெளியூர் மில்லுக்கு அனுப்பிட்டு.. துணி வாங்க பெருமையா டவுனுக்கு பஸ்ல போறீங்க...

இப்படி நம்மகிட்ட உள்ள பொருளையெல்லாம் டவுனுக்கு அனுப்பிட்டு.. டவுன எதிர்பார்த்து பொழைக்கிற மானங்கெட்ட பொழைப்புக்கு நாகரீகம்னு பேசரீங்க... இதை யார் கிட்ட போயி சொல்லி அழுவேன்.!" என்று சொல்லியபடியே நல்லமுத்து அவ்விடத்தை விட்டு நகன்றார்


நன்றி ‍சி / 1996 ஜூலை 21 / வசந்தம் / தினகரன் ஞாயிறு மலர்
அன்றைக்கு டவுனுக்கு நகர்ந்த பொருள்கள்.. இன்று நாட்டை விட்டே செல்கின்றன.. மீண்டும் அவைகளை அன்னிய நாட்டுப் பொருள் என்ற பெருமையுடன் வாங்கிக்கொள்கிறோம்... நல்ல முன்னேற்றம்... நாசமாய்ப் போய்க்கொண்டு……

நாட்டு மக்களுக்கான உணவு தந்த கிராம மனிதன்











நாட்டு மக்களுக்கான உணவு தந்த கிராம மனிதன்........

செவ்வாய், 27 ஜூலை, 2010

சாலையோர உழவன்....


ஒருதுண்டு தலைப்பாகை
மறுதுண்டு இடுப்புக் கோவணம்
மெலிந்த தேகத்தை
சுமந்தபடி.....

அய்தர் காலத்து,
ராலே மிதிவண்டியில்
ஒத்தையடிப் பாதையில்
பயணம்
முந்நூறுக்கு அறுநூறு
நிலத்தை உழவு செய்ய...

அடித்துப் பெய்த மழையில்
விதைக்கப் பட்ட விதை
பாதி நிலையில்
வளர்ந்து நிற்க...

நாலுவழிச் சாலைக்காய்
அபகரிக்க வந்துவிட்டது
அரசாங்கம்...
முந்நூறுக்கு அறுநூறும்
போகுமா?
உயர்ந்து வளர்ந்த
பனை,தென்னையும் போகுமா?

பக் பக் கென்ற மனதுடன்
வானத்தை வெறித்தபடி
உழவன்.

*********************************காரை கதிர்வேல்

மழையும்… மனிதர்களும்…


அறிகுறி அற்றதோர்
பெருமழையில்
அழகாய் நனைகிறது
காய்ந்த துணிகள்.

ப‌த‌றி எடுக்கும் அம்மா
ப‌ய‌ந்து ஒதுங்கும் த‌ங்கை
சிடுசிடுக்கும் அப்பா.

அனைத்தையும்
அணைத்துப் பொழிகிற‌து
ம‌ண்வாச‌ம் பூத்த‌
புதும‌ழை.

வாய்கவ்வா ஓடுகளால்
வாய்க்கிறது
வீட்டினுள் சாரல்…

போர்வைக்குள் ஒடுங்கியது
எங்கள்
அவசர உடலுடன்
ஆறாவது அறிவும்.

மெல்ல‌ ந‌னைந்த‌ப‌டி
உள்ள‌ம் சிலிர்க்க‌
உட‌லை உத‌றிவிட்டு
மீண்டும் ந‌னைந்த‌து எங்க‌ள் வீட்டுப் பூனை.

த‌மிழ்மோக‌ன்

வெள்ளி, 16 ஜூலை, 2010

நகரைவிட்டு ஏழைகளும் கிராமங்களைவிட்டு விவசாயிகளும்


விவசாயிகளின் நிலை இந்தியாவெங்கும் தற்கொலைக்கான போக்கிலேயே உள்ளது
அதை திட்டமிட்டு ஆளும் அரசுகள் மறைக்கின்றன
நகரைவிட்டு ஏழைகளும் கிராமங்களைவிட்டு விவசாயிகளும் வாழ்வாதாரம் தேடி இடம் பெயர்கிறார்கள்
அவர்களுக்கான சந்திப்பு எங்கே என்பதுதான் கேள்வி இலவசங்களும்
அடக்குமுறைகளும்
காவல்துறையின் கருங்காளித்தனம்குட
ஆளும்கட்சிகளின் அடிவருடும் தன்மையாகவே உள்ளன விவசாயம் பொறுத்தவரை இந்திய கல்வியாளர்கள் படு முட்டாள்களாகவே இருக்கிறார்கள்.... ஜட்டி போடும் நடிகையால் கிடைக்கும் காசை விட
பத்திரிக்கையாளர்களுக்கு
விவசாயிகளின் சாவுசெய்தி வருமானத்தை கொடுக்காது
என்பது முடிவு
இவர்களெல்லாம் பசித்தால் தின்ன தெரிந்த முட்டாள்கள்
விவசாயம் பற்றி கடுகளவும் மக்களுக்கு சொல்ல முன்வராத மடையர்கள்
அரசு ஊழியர்களும் சம்பளம் வாங்கத்தேரிந்த அளவுக்கு விவசாய ஏழைகளின் கஷ்டம் புரியாமல் லஞ்சம் பற்றிய சிந்தனை கொண்ட சுயநல கும்பல்கள் என்றே வாழ்கிறார்கள்

முட்டாள் கல்வியாளர்களும்.. சுயநல அரசியல்வாதிகளூம்


இந்தக் கட்டுரை……..

வருடா வருடம் 12 வது வகுப்பு தேர்வு முடிவுகள் ஒருவித எதிர்பார்ப்போடு வருவதும்.. வந்ததும் அதில் மாநிலவாரியாக.. மாவட்டவாரியாக..பள்ளிவாரியாக.. பல மாணவர்கள் முன்னிலை பெருவதும் அவர்களை நாளிதழ்கள் பேட்டி காண்பதும்.. அவர்களும் தங்கள் சாதனைகளால் பெருமை கொண்டு வருங்காலத்தில் நான் கலக்டர் ஆவேன்.. ஆடிட்டர் ஆவேன்.. டாக்டராவேன்..பொறியாளராவேன்.. என்று தங்களின் வண்ண வண்ண கனவுகளை எடுத்துவிடுவதும்.. ஒரு தொடர்கதையாக காட்சிகள் மாறாத நாடகமாக வருடாவருடம் நடக்கிறது...

ஒன்றை கவனித்தீர்களா...

யாராவது ஒருவர் நான் விவசாயி ஆவேன் நாட்டின் உணவுத்தேவையை போக்குவேன்.. என் நாட்டு மக்கள் பஞ்சத்தால் வாடுவது எனக்கு வேதனையளிக்கிறது.. அதை நீக்க பாடுபடுவேன் என்று சொன்னதுன்டா?

சொல்லாததற்கு காரணம் மாணவர்களல்ல

முட்டாள் கல்வியாளர்களும்..

சுயநல அரசியல்வாதிகளூம் தான்...

மூன்று நேரம் ருசியாகத்தின்ன வேண்டும் என்று நினைக்கும் மக்களும் கூட விவசாயம் பற்றி பேசாமல் இருக்க காரணம்

முட்டாள் கல்வியாளர்களும்.. சுயநல அரசியல்வாதிகளூம் தான்... பாடத்திட்டத்தில் விவசாயம் இல்லை... அதை எழுதவேண்டும் சொல்லித்தர வேண்டும் என்ற எண்ணம் ஆசிரியர்களூக்கும் இல்லை..

நல்ல விளைச்சல் நிலங்களை அன்னிய முதலீட்டு முதலாளிகளுக்கு கொடுக்க விவசாயிகளிடமிருந்து வயல்வெளீகளை கொஞ்சமும் சுரனையில்லாமல் அபகரித்து கொடுப்பது..

நாட்டு மக்களை ஏமாற்ற தரிசு நிலங்களை இலவசமாக ஏழை விவசாயிகளுக்கு தருவோம் என்று நாடகமாடுவது..

புலிகளை ஆதரித்தாலோ‍..மாவோ ஆதரவு பேசினாலோ இறையாண்மை பேசும் தேசபக்தி நடிகர்கள்..

எழை மக்களின் அடிப்படை உணவுத் தேவையான விவசாயத்தை புறக்கணித்து இறையான்மையை நாசமாக்கும் இவர்களை எந்த தடா பொடாவில் உள்ளே தள்ளுவது...

மரங்களை அழித்து.. மலைகளை உடைத்து..இயற்கையை நாசப்படுத்தி மழையை குறைத்து விவசாயிகளீன் வாழ்க்கையை நாசப்படுத்தி நகரங்களை நோக்கி அவர்களை ஓட ஓட துரத்தும் அயோக்கியத்தனத்துக்கு இறையான்மையில் தண்டனை இல்லையா...

விவசாயிகளீன் இந்த வாழ்வை எந்த மாணவன் விரும்புவான்... நகர நாகரீகத்தின் தாக்கத்தில் வாழ முடியாதபடி ஏழைகள் துரத்தப்படுகிறார்கள்...

விவசாயம் செய்ய முடியாமல் நகரை நோக்கி விவசாயி ஓடுகிறான்..

இவர்கள் எந்தப் புள்ளியிலும் சந்திக்க முடியாதபடி அரசின் கையில் மதுக்கடை.. தனியார் கையில் கல்வி..

ஏழை மாணவனுக்கு வேலை வாய்ப்பில் உத்திரவாதமில்லாமல் கல்விக்கடன்..

கடனில் கற்றவனின் அபப்னும் ஏழை..

வேலையில்லா மகனும் ஏழை..

ஏழை எப்போதும் ஏழையாகவும்..

பணக்காரன் எப்போதும் பணக்காரணாக இருக்க

ஆள்வோரின் அருமையான சதி.. இதை எப்படி உடைக்கப்போகிறோம்

வனவளம்+மீன்வளம்+விவசாயம்

கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்புகள் என்கிற காந்தியின் வார்த்தை எத்தனை பேரால் இந்தநாட்டில் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது..?

கிராமங்களின் தொழில் என்ன?

விவசாயம்..

பாய்முடைதல்..

மண்பாண்டம் செய்தல்..

போன்ற அதிக நபர்களுக்கு வேலைவாய்ப்பு தரும்…..

நாட்டு மக்களுக்கான உணவு தரும்…..

இடங்கள்தான் கிராமங்கள்,,

இதை எத்தனைபேர் உணர்ந்து கிராமத்தை வாழவைத்துக் கொண்டிருக்கிறோம்..

இந்த நாட்டில் கைத்தொழில்கள் போற்றி வளர்க்கப்படுகின்றனவா?

அறிவியல் வளர்ச்சியில் அனைத்தும் கைக்கு அடக்கமான வகையில் சுருங்கிவிட்டது.. இனி எதற்கு கைத்தொழில்களை பிடித்துக்கொண்டிருக்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறது சரிதான்.!

மருத்துவம்…. பொறியியல்…. கணக்கியல்…. மின்னியல்.. மின்னணுவியல்… என்று மனிதன் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கிறான்..




எந்த வசதியுமே இல்லாத கிராமத்தில்…

நாட்டு மக்களுக்கான உணவு தந்த கிராம மனிதன்

இன்று நகர வாழ்க்கையிலும்..

மேல்நாட்டு வாழ்க்கையிலும்

முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில்..

கிராமத்தை நினைவூட்டி ஏய்யா....

என்று நீங்க‌ள் ச‌லித்துக் கொள்வ‌தும் புரிகிற‌து.

ப‌த்தாயிர‌த்தின் ம‌ட‌ங்குக‌ளாக‌வும்..

ல‌ட்ச‌ங்க‌ளாக‌வும் ச‌ம்பாதித்து..

ச‌ம்பாதித்த‌ ப‌ண‌த்தில் ம‌னைவி குழ‌ந்தைக‌ளோடு
(பெற்றோர்க‌ளை துர‌த்திவிட்டோ அல்ல‌து முதியோர் இல்ல‌த்தில் சேர்த்துவிட்டோ)

ம‌கிழ்வோடு வாழ்ந்துகொண்டிருக்கும்போது அந்த‌ கிராம‌ காட்டானுக‌ வாழ்க்கைய‌ ஏய்யா சொல்லிட்டு நேர‌த்தை வீண‌டிக்கிறீங்க‌.!



ந்கர நாகரீகத்தின் வளர்ச்சியில் மறக்கப்பட்ட கிராமங்கள்...

உணவு விளைச்சலுக்கு காரணமான விவசாய குடும்பங்களின் வியர்வைகள்..
பணம் என்ற மூன்றெழுத்து சாதனத்தை கட்டுக்கட்டாய் சம்பாதித்துவிட்ட திமிரில்..




இங்க உணவுப் பொருள் கிடைக்கலைன்னா என்ன எங்கிட்ட பணம் இருக்கு..

வெளி நாட்டுல வாங்கிக்கறேன்..

அப்பிடியும் இல்லைன்னா வெளிநாடே குடிபோகறேன்..

இவனுக கிராமத்துல உழைச்சு நொட்டலைன்னா நாம் பொழைக்க முடியாதாக்கும்.?.

மமதை பிடித்த ஆணவ பேச்சுகள் பெருகிவருகின்றன...

இவ்விதமான எண்ணங்கள் பேச்சுகள் யார் யாரிடம் உள்ளன?

பெரும்பாலும் நகரவாழ் மக்களிடம்,,

குறிப்பாக உழைப்பை சாராமல் பணம் சம்பாதிக்கும் அறிவைக்கொண்டுள்ள அனைவரிடமும் உள்ளது,,

சாயத்தொழில்,,
தோல்பதனிடும் தொழில்,,
மணல் அள்ளும்,,
ரியல் எஸ்டேட்,,

போன்ற விவசாய சீரழிவை ஏற்படுத்தும் அனைத்து முதலாளிகளிடமும் உள்ளது..

மழையின்மை வறட்சி போன்ற காரணங்களால் நகரம் பெயர்ந்த தொழில் சார்ந்த தொழிலாளர்களிடமும் உள்ளது...

இந்த விதமான எண்ண வளர்ச்சியை.. நிலைமையை.. வளரவிடுவதால்

யாருக்கு லாபம்..?
யாருக்கு நட்டம்..?.

ஆலை உற்பத்தியானது,,

வனவளம்+மீன்வளம்+விவசாயம்

போன்ற மூன்றின் உற்பத்தியைவிட கூடுதலாக உள்ளது

என்று நாட்டின் உற்பத்தி நிலையை மதிப்பிடும் நிலையால் யாருக்கு லாபமோ அவர்களுக்கே மேற்சொன்ன லாபம்..

நட்டம் வழக்கம் போல்

வனவளம்+மீன்வளம்+விவசாயம்

போன்ற தொழில்களை நம்பி உள்ள.. நடுத்தரவர்க்கமாய் இருந்து திண்டாடுவோருக்கும்தான்..

இப்படி திண்டாடும் மக்களை திருப்திப்படுத்தத்தான்..

வேலைவாய்ப்பில் உறுதி கொடுக்காத‌ கல்விக் கடனும்..

இலவசங்களும்..

வருங்கால இளையதலைமுறையோ..

வாழும் தலைமுறையோ சிந்திக்க கூடாது என்பதற்க்குத்தான்

ஆபாச சினிமாக்கள்..

கிரிக்கெட் ஆட்டங்கள்..

வீட்டிற்குள் பெண்களை அழுத்திவைக்க தொடர்கள்..

ஆபாச சினிமா பாடல்கள் நகைச்சுவைகள்..

மீறி சிந்தித்து வருபவர்களை திசை திருப்ப சாமிகள்..



சாமியார்கள்..

சாமியார்களின் லீலைகலைக் காட்டி தங்களை

முற்போக்குவாதியாக நாடகம் காட்டுவது..
செம்மொழி மாநாடுகள்..

சினிமாத்துரை விருது விழாக்கள்..

வீதிக்கு வீதி அரசின் மதுக்கடைகள்..

இதையும் மீறி சிந்தித்து செயல்பட யாரும் முன்வந்தால்..

அவன் மீது காவல்துறையின் அடக்குமுறை..

நக்சலைட் முத்திரை.. இன்னும்.. இன்னும்...

சிந்திக்க சிரமமாக..

மனதுக்கு துக்கமாக உள்ளது..

விரக்தியடைந்து வீணாகிவிடுவோமோ என்று மனம் உழல்கிறது..

இந்தக் கட்டுரை ஒரு சீரழிவின் பதிவு..

பதியமட்டுமே எல்லோரும் செய்கிறோம் எழுத்தாளர்களாய்..