பக்கங்கள்

சனி, 12 பிப்ரவரி, 2011

எது தேசபக்தி என்ற கேள்வி பிறக்கிறது,

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு காலைப்பொழுதில் நொய்யல் நதியின்குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணையைப் பார்வையிட என் போன்றசுற்றச்சூழல் ஆர்வமுள்ள நண்பர்களுடன் சென்றபோது ஒரு முண்ணனிதொலைக்காட்சியின் நிருபர் முன் ஒரு பாட்டி பேட்டிகொடுத்துக்கொண்டிருந்தார்.. " எங்க விவசாயத்தை நாசம் செய்து எங்கவாழ்க்கையை நாசம் செய்த திருப்பூர்காரனுக நாசமாப்போவானுக.. அவனுகபுள்ளைகுட்டி எல்லாம் நாசமாப்போகுங்க... எங்க சாபம் அவங்கள சும்மாவிடாது"என்ற பேட்டி என்னை தூக்கிவாரிப்போட்டது... (அதே பாட்டி பாலமுருகனின்நொய்யல் பற்றிய குறும்படத்தில் பேட்டி கொடுத்துள்ளதாக ஞாபகம்..இவ்வளவுக்கும் அந்த பாட்டி எந்த சமூகம் திருப்பூரில் மிகுதியாக பனியன் &சாயமிடும் தொழிலில் ஈடுபட்டுள்ளதோ அந்த சமூகத்தைச் சார்ந்தவர் என்பதுஅவரது பேச்சில் தெரியவந்தது…). நண்பர்களுடன் வேகமாக ஓடிப்போய் அணைமீதுஏறி பார்த்த்போது ஏதும் புரியவில்லை... அவ்வளவு தண்ணீரை வைத்திருக்கும்ஒரத்துப்பாளையம் மக்கள் பல கிலோமீட்டர் தூரம் சென்று அன்றாட தேவைக்குநீர்கொண்டுவந்து உபயோகித்தார்கள்.. பணப்பயிர்களான வெற்றிலை போன்றதாவரங்கள் நன்கு வளர்ந்தும் வளராமலும் ஒருவிதமாய் குறுகிப்போய்வாடிக்கொண்டிருந்தன... இள‌நீரைக் குடிக்க‌லாம் என்ற் கேட்ட‌போது ஒருஇள‌நீரை வெட்டிக்கொண்டுவ‌ந்து கொடுத்தார்க‌ள்.. வாயில் வைக்க‌முடியாத‌ப‌டி ஒருவித ஆகாத‌ சுவையோடு இருந்த‌து... என் உட‌ன் வ‌ந்த‌ந‌ண்ப‌ர் அணை நீரில் கையால் அல‌ம்பிக்கொடுத்தார்.. சில‌நிமிட‌ங்க‌ளிலேயேகை அரிப்பெடுத்து சொறிய‌ ஆர‌ம்பித்தார்... ஆடு மாடுக‌ள்.. நாய்ப‌ன்றிக‌ள் கூட‌ அந்த‌ நீரை குடிப்ப‌தில்லை‌…ஒரு காலத்தில் காவேரி வரண்டபோது அதை ஈடுகட்டும் வகையில் நொய்யல்பெருக்கெடுத்து ஓடி தஞ்சை வளம் காத்ததால் அதற்கு காஞ்சிமாநதியென்று பெயர்வந்ததாக சிலர் சொல்லக்கேட்டுள்ளேன்.. இன்று நொய்யல் வரண்டுவிட‌வில்லைஆனால் அதன் நீர் சீண்ட ஆள் இல்லாமல் உள்ளது வேதனைக்குறியது...திருப்பூரின் பின்னலாடை உற்பத்தியாளர்கள் மற்றும் சாய ஆலை உரிமையாளர்கள்அனைவருமே 11000 கோடி ரூபாய் அன்னியச் செலாவணி கொடுத்து வந்த ஏற்றுமதிவியாபாரம்... சில லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்துவந்த தொழில்நசிகிறது நாட்டுக்கு நல்லதா என்று தேசபக்தி வேடம் போடுகிறார்கள்... சாயஆலை மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள்… தங்கள் தொழிலின் மூலம் ஒருநதிக்கு சமாதிகட்டிஉள்ளோம் என்கிற உண்மையை திட்டமிட்டு மறைக்கிறார்கள்,,எது தேசபக்தி என்ற கேள்வி பிறக்கிறது,,, நம் மண்ணின் விவசாயம்நசுக்கப்பட்டுள்ளது,, இயற்கை அழிக்கப்பட்டுள்ளது... நமக்கான உணவுவிளைச்சல் நிலங்கள் ஒழிக்கப்பட்டுள்ளன,, அங்கிருந்து விவசாயதொழிலாளர்கள் விரட்டப்பட்டுள்ளனர்.... விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாகமாற்றப்பட்டு சீரழிகிறது.... எது தேசபக்தி என்ற கேள்வி மீண்டும்பிறக்கிறது,,, ஒரத்துப்பாளையம் அணை விவசாயிகளின் தேவைக்காக,,காமராசர் ஆட்சிக்குப்பின் கட்டப்பட்ட ஒரே அணை.. அதுவும் இராசயன நீர்ச்சேர்க்கையால்,, ஒரு நீர் குண்டாக மாறி நிற்கிறது.. அது கட்டப்பட்டதன்நோக்கம் நிறைவேறாமலே வீணாக்கப்பட்டுவிட்டது,,சரி எல்லோருமே குற்றம் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் தீர்வு என்ன?அமெரிக்கா & அய்ரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு நதிகளோ விவசாயமோ நாசமாகக்கூடாது என்பதில் தேசபக்தியோடு இருந்துகொண்டு,,, மற்றநாடுகளுக்கு நீரை &மண்ணை நாசமாக்கி தயாராகும் பொருட்களை செய்யச்சொல்லி வாங்கிபயன்படுத்துகிறார்கள்.. அந்தவகையில் மேலை நாட்டுக்காரன் எந்தக் கலரில்தான் பின்னலாடைகளை அணீய விரும்புகிறானோ அந்த வண்ண ஆடைகளை திருப்பூருக்குஆர்டர் கொடுக்கிறான்.. உனக்கு என்ன கலரில் பின்னலாடை தேவையோ அந்தக்கலரில் தயாரித்துக் கொடுக்க நான் தயாராக உள்ளேன்,, அதனால் என்தாய்நாட்டின் நதியோ விவசாயமோ நாசமாவது பற்றி எனக்கு கவலையில்லை என்கிறநமது பின்னலாடை & சாய ஆலை முதலாளிகளின் போக்கு மாறவேண்டும்.. தூங்கிக்கொண்டோ அல்லது லஞ்சம் வாங்கிக்கொண்டோ நதிகளும் விவசாயமும் நாசமாவதைவேடிக்கை பார்க்கும் தற்போதைய மாசு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள்கூண்டோடு மாற்றப்பட்டு.. குறைந்தபட்சம் விவசாய நலன் பற்றி சிந்திக்கிறமனிதர்களை நியமித்து.. திருப்பூரின் சாய‌மிடும் தொழில் க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌வேண்டும்..இன்றைய நிலையில் திருப்பூர் சாய ஆலைகள் செயல்படா விட்டாலும்திருப்பூருக்கான சாயமிடும் பணியானது.. லாரி மூலம் துணிகளைஎடுத்துச்சென்று ஈரோடு,, பவானி,, திண்டுக்கல்,, கோவை போன்ற ஊர்களில்நடந்துகொண்டுதான் உள்ளது. மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு இதுதெரியாதா.?. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என்பது லஞ்சம் தலைவிரித்தாடும் அரசுத் துறை ஆகிவிட்டதோ என்று நம்ப வேண்டி உள்ளது

நொய்யல் நதி.. ஜம்மனை நதி.. நல்லாறு.. என்ற மூன்று நதிகளையும் அவை சார்ந்த 90 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களையும் நாசப்படுத்திய பின்னலாடைக்கான சாய ஆலைகள்.. காவிரியையோ அல்லது இதர நதிகளையோ.. விவசாய நிலங்களையோ நாசப்படுத்தாது என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்துமா?

சாயப்பட்டறைகளை மூடச்சொல்லி நீதிமன்றம் அறிவித்த நான்கு நாட்கள் ஆன பின்பும் நொய்யலில் 4100 அளவு உப்பு நீர் சாயக்கழிவுநீருடன் செல்வது என்பது.. சாயப்பட்டறை உரிமையாளர்களில் சிலரோ.. பலரோ.. நீதிமன்ற உத்தரவை மதிக்கத் தயாரில்லை என்ற எண்ணத்தை உருவாக்குகிறது இதுவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என்பது லஞ்சம் தலைவிரித்தாடும் அரசுத் துறை ஆகிவிட்டதோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது 04..02..2011 வெள்ளியன்று நடந்த வேலை நிறுத்தத்தில் பல பனியன் கம்பனிகள்கலந்துகொள்ளாமல் வேலை செய்தன.. ஏன் இப்படி என்ற விசாரணையில்….கேள்விப்பட்டது.. 2005 க்கு முன்பாகவே விவசாயிகளுக்கு நட்ட ஈடு &தண்ணீர் சுத்தகரிப்பு நிலைய பணிக்கான செலவு என்ற வகையில் சாயப்பட்டறை முதலாளிகள் ஒருகிலோ துணி சாயமிட ஏற்கனவே உள்ள கூலியுடன் ரூபாய் 25 வரை சேர்த்து வாங்கிவிட்டு.. எந்தச் செல‌வினங்களுக்காக வாங்கினார்களோ அதை முறையாகச் செய்யாமல்,, பல சாயப்பட்டறை முதலாளிகள் தங்கள் அல்லது உறவினர்களீன் பெயரில் வீடு,, காடுகளை வாங்கிப் போட்டுள்ளார்கள்... வாங்கிய பணத்தை முறையாக செலவு செய்திருந்தால் இன்றைக்கு இந்த நிலை வந்திருக்காது என்று சொல்கிறார்கள்.. உண்மையா என்பதை சுத்தகரிப்பு நிலைய கணக்குகளும்.. வருமான வரித்துறையும்.. விவசாயிகளூம்தான் கூறவேண்டும்...க‌ருப்பு.. பாட்டில்கிரீன்.. பிள‌வ‌ர்சென்ட்… ம‌ற்றும் அட‌ர்த்தி அதிக‌ம்(FAST COLOUR) கொள்ளும் க‌ல‌ர்க‌ளுக்கு அர‌சு த‌டை விதிக்க‌ வேண்டும்..முத‌லாளிக‌ளும் தேச‌ பாதுகாப்பில் த‌ங்க‌ளுக்கும் ப‌ங்கு உண்டு என்ப‌தைஉண‌ர்ந்து இதைக் க‌டைப்பிடிக்க‌ முன் வ‌ர‌வேண்டும் (அடர்த்தி மிகுகலர்கள் (FAST COLOUR) சாயமிடும்போது... அந்த வேலை செய்பவர்கள் தங்கள்உடல்மீது இராசயன பொருட்கள் பட்டுவிடாமல் இருக்க பாதுகாப்பு கவசங்கள்அணிந்துகொள்கிறார்கள்.. மேலும் சில இராசயன பொருட்கள் கையில் பட்டால்துளையிட்டுவிடும் அபாயமும் உண்டு..... மனிதனையே துளைக்கும் சாயமிடும்தொழிலின் மூலப்பொருட்களின் கழிவுகள் நிலத்தில் தேங்கி நிலத்தடிநீரில்இணைந்தால் விவசாயம் என்ன ஆகும்?)...அமெரிக்காவிலிருந்து வரும் கோக்கோகோலா என்ற பானத்தின் தயாரிப்பிடம்அமெரிக்காவில் இல்லை... கோக்கோகோலா தயாரிப்பு என்பது இராசயனம்சம்பந்தப்ப்ட்ட மாசுவை வெளியேற்றும் தொழில் என்பதால்,, அது விவசாயத்தை நாசப்படுத்தும் என்பதால்,, அந்த தொழிற்சாலையை தேசபக்தி கொண்ட அமெரிக்க தொழில் அதிபர்கள் தங்கள் நாட்டிற்குள் நடத்தவில்லை என்பதை சாய ஆலை, பின்னலாடை உரிமையாளர்கள் கவனிக்க வேண்டும். மேலை நாடுகளின் தேவைக்காக இந்தியாவை விவசாயம் அழிந்த.. ஒரு குப்பைக்கூடையாக மாற்றலாமா?

முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற இயற்கையை நமது வாரிசுகளூக்கு விட்டுச் செல்லவேண்டாமா?

பனியன் உற்பத்திக்காக பலப் பல இயந்திரங்களை தயாரிக்கும் மேற்குலக நாடுகள் ஏன் பனியனை தயாரிக்க முன்வருவதில்லை.. பின்னலாடை சாயாஆலை உரிமையாளர்கள் பதில் சொல்ல வேண்டிவரும்செயற்கை ரசாயன சாயங்களை தவிர்ப்பதன் மூலமும்.. கலர் பருத்திவிளைவிப்பதன் மூலமும்,, சாயப் பிரச்சனைகளைத் தவிர்க்களாம்...அரசியல்வாதிகளும் சாயப்பட்டறை உரிமையாளர்களும் இதை ஏற்றுக்கொண்டுநாட்டின் நலனே முக்கியம் என்று ஒப்புக்கொள்வார்களா? கேள்விக்குறிதான்சாய ஆலை கழிவுநீரை குழாய்மூலம் கடலுக்கு கொண்டு செல்வதில் உள்ளஇடையூறுகள்.. பாதிக்கப்படும் விவசாயம்,, மீன்பிடி தொழில் பற்றி தனியேஒரு கட்டுரை எழுத வேண்டும்,, எனவே இதுவும் சாத்தியமில்லா ஒன்றுதான்.சாய‌ ஆலையிலிருந்து வெளியேறும் க‌ழிவு நீரில் உப்பின் த‌ன்மை விவ‌சாய‌நில‌ங்க‌ள் ஏற்றுக்கொள்ளும் 2100 அள‌வைவிட‌ குறைவாக‌ இருப்ப‌தை விவ‌சாயிக‌ள் மூல‌ம் அடிக்க‌டி நீதிம‌ன்ற‌ம் உறுதிசெய்துகொள்ள‌ வேண்டும்..இது ஒன்றுதான் சாய ஆலைகளின் பிரச்ச்னைக்கு தீர்வு…… மற்றவை அனைத்தும் தேவையில்லாமல் பேசப்படும் வீண் விவாதங்கள்தான்.!.இது தவிர சாய ஆலைக்க்ழிவுகள் மூலமாக வந்துள்ள... மூட்டை மூட்டையாககட்டிப் போடப்பட்டுள்ள... காற்றின் மூலமாக மனிதனை முடமாக்ககாத்திருக்கும் திடக் கழிவுகளுக்கும் ஒரு முடிவு கட்டவேண்டும்,,நீதிமன்றமோ மாசுக் கட்டுப்பாட்டுத் துறையோ சாய ஆலை முதலாளிகளோ மக்களோ பத்திரிக்கைகளோ இந்த திடக் கழிவு பற்றி வாய்பேசாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை.. பாதிப்பு வந்தபின்புதான் அது பற்றி பேசுவார்களோ என்னவோ.?.பணம் மட்டுமே குறியாக இருந்து,, அதை சம்பாரித்து அடுத்த தலைமுறைக்குவைத்துவிட்டுச் செல்லும் முதலாளீகள் தங்கள் வாரிசுகளுக்கு இயற்கையை நல்ல முறையில் விட்டுச்சென்றால் தானே அவர்கள் பசி,, நோய்,, நொடி.. இன்றிவாழ முடியும்.. பசிக்காக பணக்கட்டுகளையும்.. தாகத்திற்காக சாயக்கழிவுநீரையுமா பயன் படுத்த முடியும்.?. ஒருநாட்டின் சுயமுன்னேற்றம் என்பதுவிவசாயத்தை அழிக்கும் தொழில் வளர்ச்சியா? சம்பந்தப்பட்டவர்கள்சிந்திப்பார்களா?.. சீரழிப்பார்களா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்

Please reply to 2010kathir@gmail.com

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

இப்ப எல்லாரும் நாகரீகத்தை படிச்சிட்டாங்க

அது ஒரு பெரிய கிராமம்..
அய்நூறு வீடுகளுக்குமேல் அந்தகிராமத்தில் உள்ளது..

ஆரம்பகாலத்தில் ஏழெட்டு வீடுகளே தோன்றிய கிராமம் வேகமாக வளர்ந்தது...
அய்நூறு வீடுகள்வரை பெருகி அதன்பின்.. அந்த வளர்ச்சி சட்டென நின்று விட்டது...

அதாவது 1930 ல் உருவான அந்த ஊர் 1950 ஆம் வருடத்துடன் வளர்ச்சியை நிறுத்திக்கொண்டது...

அந்த ஊரை ஒட்டி ஒரு நெடுஞ்சாலை போகிறது.. அதில் அந்த ஊருக்கு தொடர்பாக பல பேருந்துகள் வந்து போகின்றன...
தற்போது ஒரு அய்ந்தாறு நாளாய் ஏதோ கலவரத்தால் பேருந்து போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது...

பேருந்து போக்குவரத்து இல்லை என்றதும்... அந்த ஊர் மனிதரெல்லாம் ஏதோ கை கால் இழந்தது மாதிரி... எந்த செயலையும் செய்ய முடியாமல் நிலைகுலைந்து போய் இருந்து கொண்டிருக்கிறார்கள்....

நல்லமுத்து என்ற அந்த ஊர்க்காரர்.. அவர் தெருவழியே நடந்து வரும்பொழுது.. பேருந்து போக்குவரத்து பாதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பை கவனித்தார்...

இன்னும் சிலநாள் பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டால் அனேகம் பேருக்கு சுவாசமே நின்றுவிடும் போல் அவருக்குத் தோண்றியது..

நல்லமுத்துவுக்கு எதிரே வீரபாண்டி என்ற இளைஞன் சைக்கிளீல் வந்துகொண்டிருந்தான்.. சைக்கிளை சற்று நிறுத்தி "என்ன தாத்தா நலமா?" என்று நல்லமுத்துவை விசாரித்தான்...

"என் நலத்திற்கு என்ன குறை? நம்ம ஊருக்குத்தான் நலமில்லை போலிருக்கிறது.. பேருந்தெல்லாம் இன்னும் சிலநாள் ஓடலீன்னா அவ்வளவு பேருக்கும் பைத்தியம் பிடிச்சிடும் போலிருக்கே" என்றார் நல்லமுத்து...

"ஆமாம் தாத்தா ! அந்தக் காலம் மாதிரியா? அப்போ யாரும் அதிகம் வெளியூரே போகமாட்டாங்க.. இப்ப எல்லாரும் நாகரீகத்தை படிச்சிட்டாங்க.. எது வேணும்னாலும் பக்கத்து நகரத்துக்கு போற மாதிரி பழகிட்டாங்க... இனி பேருந்து இல்லாம வாழ முடியுமா" என்றான்...

இதைக் கேட்ட நல்லமுத்துவுக்கு மனதில் எரிச்சலாக இருந்தது...

" எத்ப்பா நாகரீகம்? முன்பெல்லாம் வயலுக்கு தேவையான உரம் உள்ளூரிளேயே சாணம் குப்பை தழையின்னு நாமே உரக்குழியில் சேர்த்து வச்சிருப்போம்...

உழ வேண்டிய ஏருக்கு கொலு வேணுமின்னா உள்ளூர்லயே கொல்லுப்பட்டரை இருக்கும்..

அரிசி,காய்கறி எல்லாம் உள்ளூரிலேயே வெளஞ்சிது..

சுக்கு காபி சாப்பிடறதுக்கு கருப்பட்டியோ, கரும்பு வெள்ளமோ உள்ளூர்லயே கிடைக்கும்..

தேங்காயெண்ணெய், நல்லெண்ணெய் உள்ளூர் செக்கிலயே ஆட்டுவாங்க....

விளக்கெண்ணெய வீட்டுலயே காச்சிக்குவாங்க....

வேட்டி துண்டு சேலை வேணுமின்னா.. உள்ளூர்லயே நெசவு போட்டிருப்பாங்க...

ஆக ஒவ்வொரு தேவையும் உள்ளூர்லயே கிடைக்கிற மாதிரி இருக்கும்... அதுனால நகரம் அது இதுன்னு அலைய வேண்டிய அவசியம் வரலை....

இப்போ நாகரீகம் வந்துட்டு... பேருந்து வந்திட்டுதுன்னு..

நகரம் போயி வெளிநாட்டு உரத்த வாங்க ஆரம்பிச்சீங்க..

சின்ன ஊசி,ஆனி வேணும்னாலும் நகரத்துக்கு ஓட ஆரம்பிச்சி உள்ளூர் கொல்லுப்பட்டறையை ஒழிச்சீங்க...

கிராமத்துல விளையற பொருளையெல்லாம் பஸ்ல நகரத்துக்கு அனுப்பிட்டு.. மறுபடி டவுனுக்கு பஸ்ல போயி அந்த சாமான வாங்கீட்டு வர்றதை பெருமையா நெனக்கறீங்க...

ஊர்ல விளைஞ்ச கரும்பு, எள் எல்லாத்தையும் மூட்டைகட்டி நகர ஆலைக்கு அனுப்பிவிட்டு.. எண்ணெய் வாங்க டவுனுக்கு ஓடுரீங்க...

பருத்திய வெளியூர் மில்லுக்கு அனுப்பிட்டு.. துணி வாங்க பெருமையா டவுனுக்கு பஸ்ல போறீங்க...

இப்படி நம்மகிட்ட உள்ள பொருளையெல்லாம் டவுனுக்கு அனுப்பிட்டு.. டவுன எதிர்பார்த்து பொழைக்கிற மானங்கெட்ட பொழைப்புக்கு நாகரீகம்னு பேசரீங்க... இதை யார் கிட்ட போயி சொல்லி அழுவேன்.!" என்று சொல்லியபடியே நல்லமுத்து அவ்விடத்தை விட்டு நகன்றார்


நன்றி ‍சி / 1996 ஜூலை 21 / வசந்தம் / தினகரன் ஞாயிறு மலர்
அன்றைக்கு டவுனுக்கு நகர்ந்த பொருள்கள்.. இன்று நாட்டை விட்டே செல்கின்றன.. மீண்டும் அவைகளை அன்னிய நாட்டுப் பொருள் என்ற பெருமையுடன் வாங்கிக்கொள்கிறோம்... நல்ல முன்னேற்றம்... நாசமாய்ப் போய்க்கொண்டு……

நாட்டு மக்களுக்கான உணவு தந்த கிராம மனிதன்











நாட்டு மக்களுக்கான உணவு தந்த கிராம மனிதன்........